வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
மல்லகுண்டா ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட, நாட்டறம்பள்ளி ஒன்றியம் மல்லகுண்டா ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை நேற்று காலை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு 10 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கும் இடத்தையும் பார்வையிட்டார். மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு அது எங்கெங்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து விவரங்களை கேட்டு அறிந்தார்.
தொடர்ந்து பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டு அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் கலீல், சதானந்தம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.