வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-10-15 21:00 GMT


ஊட்டி ஊராட்சி ஒன்றியம் கீழ்குந்தா பேரூராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49.83 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை பள்ளி கட்டிடத்தை கலெக்டர் அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சாம்ராஜ் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவிகள் தங்கும் விடுதி, ஆதிராவிடர் மாணவிகள் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் தங்கும் வசதிகள், சமையல் கூடம் மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். முன்னதாக கிண்ணக்கொரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, பொருட்களின் தரம் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, குந்தா தாசில்தார் கலைச்செல்வி, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், நந்தகுமார் உடனிருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்