குளம்வெட்டப்படும் பணிகளை கலெக்டர் ஆய்வு

குளம் வெட்டப்பட்டு வருவதை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-07-21 18:29 GMT

காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் அனந்தலை ஊராட்சியில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினையொட்டி குளம் வெட்டப்பட்டு வருவதை இன்று கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது குளம் வெட்டப்பட்ட பின்னர் இப்பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்றிவிட்டு குளக்கரையிலும், காலியிடங்களிலும் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

இப்பணியினை ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர் தேவகி மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்