காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு
மல்லல் ஊராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் திருப்புல்லாணி யூனியனுக்கு உட்பட்ட மல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டதை பார்வையிட்டார். உணவின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். அங்கிருந்த பள்ளி குழந்தைகளிடம் தினமும் காலை உணவு திட்டத்தில் உணவு சாப்பிட்டு விட்டு பின்னர் வகுப்பறைக்கு செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் அரசு வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு நாளும் திட்டமிட்டபடி காலை உணவுகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கிட வேண்டுமென பணியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து சாம்பக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.22.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிட பணியை பார்வையிட்டு உரிய காலத்திற்குள் பணியை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.