வருவாய்த்துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட இடத்தில் கலெக்டர் ஆய்வு
வருவாய்த்துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட இடத்தில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்;
திருச்சி மேற்கு தாசில்தார் அலுவலகம் பின்புறத்தில் யூனியன் கிளப் இருந்த இடம் வருவாய்த்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையொட்டி அந்த இடத்தை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் மணிகண்டம் ஒன்றியம் நவலூர்குட்டப்பட்டு ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சிகள் உதவி இயக்குனர் கங்காதாரணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.