தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
மன்னார்குடி:
மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், இருப்பு கோப்பு, இணையதள பட்டா மாறுதல், பயிர் சேத கணக்கெடுப்பு உள்ளிட்ட பதிவேடுகளை கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதில் மேற்கண்ட பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா எனவும், இணையதள பட்டா வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உரிய காலத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளதா என்றும் கலெக்டர் ஆய்வு செய்தார்.இதில் தாசில்தார் ஜீவானந்தம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.