அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு

தென்காசியில் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-06-08 19:00 GMT

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நேற்று தென்காசி அருகே உள்ள கிளாங்காடு கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள குழந்தைகளிடம் கலந்துரையாடினார். பின்னர் சாம்பவர் வடகரையில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிட பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து தென்காசி ஆலித் நகர் அருகில் நெடுஞ்சாலையில் மரக்கன்றுகளை நட்டார். அப்போது அவர் கூறும் போது சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பருவமழைக்கு முன்பாக தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 7,700 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மகிழம், வேம்பு, புளியன், புங்கன், நாவல், சரக்கொன்றை போன்ற வகையைச் சேர்ந்த மரக்கன்றுகள் நடப்படுகின்றன என்றார். இதில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜசேகர், உதவி பொறியாளர் பூமிநாதன் மற்றும் சாலை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்