அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு

காரியாபட்டி அருகே அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-09-20 20:54 GMT

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரலொட்டி ஊராட்சியில் ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது வரலொட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு, பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் அரிசி, பருப்புகள் மற்றும் பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். அங்குள்ள கிராம அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் வருகை, அவர்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு மற்றும் அதன் தரம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

வாசிப்புத்திறன்

வரலொட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள், பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து கற்பிக்கும் முறைகள், குழந்தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்து ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், தாசில்தார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்