அங்கன்வாடி மையம், ரேஷன் கடை கட்டும் பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு

நாகை நகராட்சி பகுதியில் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை கட்டும் பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.

Update: 2023-05-13 19:15 GMT

நாகை நகராட்சி பகுதியில் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை கட்டும் பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.

அங்கன்வாடி மையம்

சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நாகூர் பட்டினச்சேரி பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுமான பணிகள், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் ரெயில்வே சுரங்கப்பாதை மேம்பாட்டு பணிகள், நாகூர் மியா தெருவில் உள்ள நாகூர் இஸ்லாம் நடுநிலைப்பள்ளியில் ரூ.6 லட்சத்து 20 ஆயிரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள், நாகூர் சையது பள்ளி குளத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள், அம்பேத்கர் நகர் பீரோடும் தெருவில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணிகள் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விரைந்து முடிக்க உத்தரவு

இதைத் தொடர்ந்து வடக்கு பால்பண்ணைச்சேரி எம்.ஆர்.பி. நகரில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணிகளையும், தம்பிதுரை பூங்காவில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார்.

மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆய்வின் போது நகராட்சி பொறியாளர் விஜய் கார்த்திக் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்