ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்
எஸ்.புதூர்
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதையொட்டி அவர் ஆண்டாய்வு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்துணவு சாந்தி, எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்குமார், சத்யன் உள்பட எஸ்.புதூர் ஒன்றிய அலுவலக பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.