6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எடை கண்டறியும் பணி கலெக்டர் நேரில் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எடை கண்டறியும் பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2023-03-10 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எடை கண்டறியும் பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

ஊட்டசத்தின் முக்கியத்துவம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது.:-

சிவகங்கை மாவட்டத்தில் போஷான் அபியான் திட்டத்தில் போஷான் பக்வாடா என்பதனை குறிக்கோளாக கொண்டு பிறந்தது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எடை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 1,552 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 61 ஆயிரத்து 632 ஆகும்.

பிறந்தது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உடல் எடை, உயரம், அளவு போன்றவை கணக்கிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அவா்களின் ஊட்டச்சத்தின் நிலை கண்டறியப்படும்.

பெற்றோருக்கு அறிவுரை

வயதிற்கேற்ற எடை குறைதல் அல்லது கூடுதலாக இருத்தல், வளா்ச்சி குறைந்து இருத்தல் போன்றவை கண்டறிந்து, குழந்தைகளின் பெற்றோருக்கு இதுகுறித்து அறிவுரைகள் வழங்கப்படும். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வழங்கிடவும், குழந்தைகளுக்கு தேவையான உணவு கட்டுப்பாட்டு முறைகள் குறித்து பெற்றோருக்கு கற்றுத்தரப்படும். குழந்தைகளை தொடா் கண்காணிப்பில் பராமரித்து அவா்கள் சீரான உடல்நிலை வரும்வரை ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் ஆய்வு

பின்னர் அவர் திருப்பத்தூர் அருகே உள்ள தம்பிப்பட்டி அங்கன்வாடி மையத்தில் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எடை மற்றும் உயரம் அளவிடும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலர் திருமகள், மாவட்ட திட்ட உதவியாளா் எஸ்.கீதவர்ஷினி, திருப்பத்தூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தாரணி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனா்.

Tags:    

மேலும் செய்திகள்