ரூ.65 லட்சத்தில் கழிவறை-நகர் நல மையம் கட்டுமான பணிகள்

திருவாரூரில் ரூ.65 லட்சத்தில் நடந்து வரும் கழிவறை மற்றும் நகர் நல மையம் கட்டுமான பணிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

Update: 2022-06-30 18:03 GMT

திருவாரூரில் ரூ.65 லட்சத்தில் நடந்து வரும் கழிவறை மற்றும் நகர் நல மையம் கட்டுமான பணிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

கட்டுமான பணிகள்

திருவாரூர் நகராட்சி பழைய பஸ் நிலையத்தில் கழிவறைகள் மற்றும் நகர் நலமைய கட்டிட கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டும் பணி நடக்கிறது. இந்த கழிவறை கட்டிடம் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நகர் நல மையத்தின் கட்டுமான பணிகளும் நடந்து வருகின்றன. இங்கு சிகிச்சை அளிப்பதற்கான அறை, யோகா செய்வதற்கான அறை மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

விரைவில் பயன்பாட்டுக்கு...

இந்த கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின்போது நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில், துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், நகராட்சி ஆணையர் பிரபாகரன், நகரசபை உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்