மேல்புறம் ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

மேல்புறம் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2022-10-26 18:41 GMT

நாகர்கோவில்:

மேல்புறம் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

குமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெல்லம்கோடு ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.03 லட்சம் மதிப்பில் 3 முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள கட்டிடமறு சீரமைப்பு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. வெல்லம்கோடு அரசு தொடக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.83 லட்சம் மதிப்பில் மாணவிகளின் கழிவறை கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணியினை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

குளம் தூர்வாரும் பணி

மேலும் வெல்லம்கோடு ஊராட்சி பகுதியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பில் பயனாளி நடேசன் அவர்களின் வீட்டின் கட்டுமான பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில்

பொட்டகுளத்தினை அகலப்படுத்தி தூர்வாரும் பணியினையும், பயனாளி ஏசுதாஸ் வீட்டில் ரூ.9 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டிருந்த உறிஞ்சு குழியினையும், பயனாளி கீதா விஜயன் வீட்டில் ரூ.9 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டிருந்த உறிஞ்சு குழியினையும், ரூ.13.33 லட்சம் மதிப்பில் பள்ளிகுளத்தினையும் தூர்வாரும் பணியும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதைத்தொடா்ந்து 15-வது நிதிக்குழு கிராம பஞ்சாயத்து திட்டத்தின் கீழ் ரூ.4.52 லட்சம் மதிப்பில் ஓட்டுக்குழி வாழவிளாகம் சாலையில் நடைபெற்றுவரும் வடிகால் கட்டுமாப் பணியினையும் ஆய்வு செய்து, விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்