வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

திருக்கடையூரில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-03-24 19:00 GMT

திருக்கடையூர்;

திருக்கடையூர் ஊராட்சியில் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், திருக்கடையூர் சன்னதி தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிடம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் செலவில் கட்டப்பட்ட வரும் கூடுதல் வகுப்பறை ஆகியவற்றை பார்வையிட்டார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, வட்டார வளர்சி ஆணையர் மீனா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் ஆகியோர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்