புதிதாக ஐ.டி.ஐ. தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்

புதிய தொழிற் பள்ளிகள்(ஐ.டி.ஐ.) தொடங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Update: 2023-01-12 18:45 GMT


சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

2023-2024-ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள்(ஐ.டி.ஐ.) தொடங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2023-2024-ம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற் பிரிவுகள் கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ.5,000 மற்றும் ஆய்வு கட்டணம் ரூ.8,000 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்ரவரி மாதம் 28-ந் தேதியாகும். மேலும் தகவல்களுக்கு இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்