முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு போட்டி
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், நடைபெற உள்ளன.
ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் என மொத்தம் 50 வகையான போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளன.
இணையதளத்தில்
இப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் வீரர் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in, -ல் வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விபரங்களையும் பதிவு செய்திடல் வேண்டும்.
இது தொடர்பான மேலும், விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலுள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி எண்களான 74017 03503 மற்றும் 04575-299293 என்ற எண்களிலோ தொடர்பு கொண்டு தகவல்கள் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.