அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட காவலூர்-சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று காலை கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களின் சிகிச்சைக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் அனைத்தும் போதுமான அளவு இருப்பு இருக்கிறதா என்பதை மருத்துவ அலுவலர் மதன்குமாரிடம் கேட்டறிந்தார். பின்னர் ஒவ்வொரு அறைகளையும் ஆய்வு செய்தார்.
மேலும் கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை சம்மந்தமாக மருத்துவ அலுவலரிடம் ஆலோசனை செய்த பின்னர் சிறப்பு ரத்தசோகை முகாம் நடத்த ஊராட்சி மன்ற தலைவரிடம் அறிவுறித்தினார்.
ஆய்வின்போது வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் மேகலா திருப்பதி, கிருஷ்ணமூர்த்தி, மருந்தாளுநர், சுகாதார ஆய்வாளர், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உடன் இருந்தனர்.