நெடுஞ்சாலைத்துறை மூலமாக 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் கலெக்டர் ஆஷா அஜீத் தொடங்கி வைத்தார்
நெடுஞ்சாலைத்துறை மூலமாக சிவகங்கை மாவட்டத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் ஆஷா அஜீத் தொடங்கி வைத்தார்.
நெடுஞ்சாலைத்துறை மூலமாக சிவகங்கை மாவட்டத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் ஆஷா அஜீத் தொடங்கி வைத்தார்.
மரக்கன்றுகள் நடும் திட்டம்
தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சாலை ஓரங்களில் மரக்கன்று நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை ஓரங்களில் மரக்கன்று நடும் திட்டம் சிவகங்கை-திருப்பத்தூர் ரோட்டில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் ஆஷா அஜீத் கூறியதாவது:- நெடுஞ்சாலை துறை மூலமாக தமிழ்நாடு முழுவதும் சாலை ஓரங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
பராமரிப்பு
இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. இப்பொழுது நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரித்து வளர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்திரசேகர், உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராகிம், உதவி பொறியாளர் முருகானந்தம், வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண், உதவி வன பாதுகாவலர் மலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வெண்ணிலா, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.