மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் சாதனை படைத்த மாணவருக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி அரியானா மாநிலத்தில் நடந்தது. இந்த போட்டியில் நெல்லை லிட்டில் பிளவர் மாடல் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் நெல்லை சந்திப்பு கண்ணம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாணவன் ராம்பிரபாஸ் என்பவர் கலந்து கொண்டு விளையாடி 3-வது பரிசு பெற்றார். விளையாட்டில் சாதனை படைத்த மாணவர் ராம்பிரபாஸை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு அழைத்து பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியன், ஐஸ் ஸ்கேட்டிங் சங்கச்செயலாளரும், பயிற்சியாளருமான அழகேசராஜா, லிட்டில் பிளவர் பள்ளி துணை முதல்வர் உலகநாயகி, மாணவனின் தந்தை முத்துப்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.