மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மாணவர்களை கலெக்டர் பாராட்டினார்.

Update: 2022-11-25 20:27 GMT

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு இந்து தொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் அகல்விழி என்ற மாணவி 99 குறிஞ்சி பூக்களை 31 வினாடிகளில் ஒப்புவித்து கலாம் உலக சாதனை படைத்துள்ளார். இதைபோல் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஜெகநாத் என்ற மாணவன் 50 திருக்குறள்களை 1 நிமிடம் 51 வினாடிகளில் ஒப்புவித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற 2 மாணவர்கள் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி ஆகியோரை சந்தித்தனர். சாதனை படைத்த மாணவர்களை கலெக்டர் மேகநாதரெட்டி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி ஆகியோர் பாராட்டினர். முன்னதாக மாணவன் ஜெகநாத் கலெக்டரின் உருவப்படத்தை வரைந்து அவரிடம் கொடுத்தார். படத்தை பெற்று கொண்ட கலெக்டர் அவரை பாராட்டி ஊக்குவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்