சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
வாசுதேவநல்லூர் சிறப்பு பள்ளி மாணவர்களை கலெக்டர் ஆகாஷ் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.;
வாசுதேவநல்லூர்:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட வாசுதேவநல்லூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளி மாணவர்கள் யோகா செய்து சிறப்பித்தனர். அதனை தொடர்ந்து அந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர் ஆகியோரை கலெக்டர் ஆகாஷ் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். விழா ஏற்பாடுகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கே.என்.ஜெயபிரகாஷ் செய்திருந்தார்.