அரசு கல்லூரி மாணவிக்கு, கலெக்டர் பாராட்டு

தேசிய வலைப்பந்து போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த அரசு கல்லூரி மாணவிக்கு கலெக்டர் சாந்தி பாராட்டு தெரிவித்தார்.

Update: 2022-11-22 19:30 GMT

அரியானா மாநிலம் சோனிப்பேட் பகுதியில் நடைபெற்ற 46-வது தேசிய அளவிலான மூத்தோருக்கான வலைப்பந்து போட்டியில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மாணவி அகல்யா தமிழக அணியில் பங்கேற்று முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். திருவண்ணாமலை மாவட்டம் கட்டமடுவு கிராமத்தைச் சேர்ந்த இந்த மாணவி தர்மபுரியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் தங்கி தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. விலங்கியல் 3-ம்ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை படைத்த மாணவியை தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சாந்தி பாராட்டினார். அப்போது இதேபோன்று தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, வெற்றிபெற்று, தமிழ்நாட்டிற்கும், தர்மபுரி மாவட்டத்திற்கும், தாங்கள் பயிலும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்று அந்த மாணவிக்கு வாழ்த்து கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவிதா, பழங்குடியினர் நல திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்