தர்மபுரியில்அரசு அலுவலர்களுக்கான நூலகம்கலெக்டர் சாந்தி திறந்து வைத்தார்

Update: 2023-05-06 19:00 GMT

தர்மபுரியில் அரசு அலுவலர்களுக்கான நூலகம் மற்றும் இறகுப்பந்து மைதானத்தை கலெக்டர் சாந்தி திறந்து வைத்தார்.

நூலகம் திறப்பு

தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகை அருகில் அரசு அலுவலர்களுக்கான நற்பணி மன்ற நூலகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி நூலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் அவர் நூலகத்தை பார்வையிட்டார்.

பின்னர் கலெக்டர் பேசுகையில், அரசு அலுவலர்கள் வேலைப்பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க நூல்களை படிக்க வேண்டும். இந்த பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள இதுபோன்ற நூலகங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.

இறகுப்பந்து மைதானம்

தொடர்ந்து தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு அலுவலர்களின் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள இறகுப்பந்து மைதானம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிலும் கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு இறகுப்பந்து மைதானத்தை திறந்து வைத்து அலுவலர்கள் இடையே நடைபெற்ற இறகுப்பந்து போட்டிகளை பார்வையிட்டார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தர்மபுரி உதவி கலெக்டர் கீதா ராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பழனிதேவி, நசீர் இக்பால், மாவட்ட வழங்கள் அலுவலர் ஜெயக்குமார், முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், தாசில்தார் ஜெயசெல்வம் மற்றும் அரச அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்