அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த 100 வயது மூதாட்டிக்கு பாராட்டு கடிதம் கலெக்டர் சாந்தி நேரில் வழங்கினார்
அனைத்து தேர்தலிலும் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய தர்மபுரியைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி முனியம்மாளை பாராட்டி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எழுதிய பாராட்டு கடிதத்தை கலெக்டர் சாந்தி நேரில் வழங்கினார்.
அனைத்து தேர்தலிலும் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய தர்மபுரியைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி முனியம்மாளை பாராட்டி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எழுதிய பாராட்டு கடிதத்தை கலெக்டர் சாந்தி நேரில் வழங்கினார்.
முதியோர்களுக்கு பாராட்டு
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த 80 வயதிற்கும் மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு பாராட்டு விழா தர்மபுரி தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சாந்தி தலைமை தாங்கி 25 முதியோர்கனை பாராட்டி கவுரவித்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் வாழ்த்து கடிதத்தை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அனைத்து தேர்தலிலும் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றி வரும் தர்மபுரி குப்பா கவுண்டர் தெருவை சேர்ந்த 100 வயது நிரம்பிய முனியம்மாள் இல்லத்திற்கு கலெக்டர் சாந்தி நேரில் சென்று மூதாட்டியை பாராட்டி கவுரவித்து, இந்தியத் தலைமை தேர்தல் ஆணையரின் வாழ்த்து கடிதத்தை வழங்கினார்.
இளம் வாக்காளர்கள்
அப்போது கலெக்டர் கூறுகையில், 80 வயதிற்கும் மேல் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் வாக்காளர்களின் பங்களிப்பை பாராட்டும் வகையில் முதியோர்கனை பாராட்டி, கவுரவித்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் வாழ்த்து கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இளம் வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவரையும் தவறாமல் அவர்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி தாசில்தார் ராஜராஜன், கலெக்டர் அலுவலக தேர்தல் தனி தாசில்தார் சவுகத் அலி, தேர்தல் துணை தாசில்தார் நாராயண மூர்த்தி, உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கும் 80 வயதிற்கும் மேல் உள்ள மூத்த குடிமக்கள், முதியோர்கள் கலந்து கொண்டனர்.