கிருஷ்ணகிரியில்மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்கலெக்டர் சரயு கொடியசைத்து தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரியில் நடந்த மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சரயு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி லண்டன்பேட்டை, பெங்களூரு சாலை வழியாக அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது.
முன்னதாக மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விருப்புணர்வு ஏற்படுத்து வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன எல்.இ.டி. வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு குறித்த குறும்பட விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த ஊர்வலத்தில் நகராட்சி தலைவர் பரிதாநவாப், நகராட்சி ஆணையாளர் வசந்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் லோகநாதன், உதவி நிர்வாக பொறியாளர் ரோகத்சிங், மாவட்ட துணை நிலை நீர் வல்லுநர் மணிமேகலை, உதவி துணை நிலை நீர் வல்லுநர் ராதிகா, தாசில்தார் விஜயகுமார், அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ராஜப்பன், நித்யபிருந்தா, தமிழ்செல்வன், அல்போன்சா, மேரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.