செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி பகுதியினை தூய்மையான நகரமாக மாற்றுவதற்கு துய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் அனைத்து 2, 4-ம் சனிக்கிழமைகளில் சிறப்பு கூட்டு துப்புரவு பணியினை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் கூட்டு துப்புரவு பணி முகாம் நடந்தது. நகராட்சி ஆணையாளா் பார்கவி தலைமை தாங்கினார். சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினா்கள் முத்துப்பாண்டி, வேம்புராஜ், இந்துமதிசக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து தூய்மைக்கான விழிப்பணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னா் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு சென்று திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பஸ் நிலையத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது
இதில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் முத்துமாணிக்கம், காளியப்பன், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.