ரூ.16¾ லட்சம் காணிக்கை வசூல்
ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் ரூ.16¾ லட்சம் காணிக்கை வசூல் 61 கிராம் தங்க நகைகள், 150 கிராம் வெள்ளி பொருட்களும் கிடைத்தன
ரிஷிவந்தியம்
சங்கராபுரம் தாலுகாவில் உள்ள ஆதிதிருவரங்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த ரங்கநாயகி தாயார் சமேத ரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு மார்கழி மாதம் முடிந்ததை அடுத்து நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவாகரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பாலாஜிபூபதி, திருக்கோவில் ஆய்வாளர் பாக்கியலட்சுமி, செயல் அலுவலர் பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. தொடர்ந்து திருக்கோவில் பணியாளர் சிவபிரகாஷ் மற்றும் ஊழியர்களை கொண்டு உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இதில் ரொக்கமாக ரூ.16 லட்சத்து 75 ஆயிரத்து 65 காணிக்கை வசூல் ஆனது. மேலும் 61 கிராம் தங்க நகைகள், 150 கிராம் வெள்ளி பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.