பொங்கல் விடுமுறையின் கடைசி நாளில் குமரியில் இருந்து வெளியூருக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள் மூலம் ரூ.82 லட்சம் வசூல் அதிகாரி தகவல்

பொங்கல் விடுமுறையின் கடைசி நாளில் குமரியில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ஒரே நாளில் ரூ.82 லட்சம் வசூலாகி உள்ளது.

Update: 2023-01-18 18:45 GMT

நாகர்கோவில்:

பொங்கல் விடுமுறையின் கடைசி நாளில் குமரியில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ஒரே நாளில் ரூ.82 லட்சம் வசூலாகி உள்ளது.

சிறப்பு பஸ்கள்

பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கடந்த 15-ந் தேதியன்று கொண்டாடப்பட்டது. இதற்காக சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் குமரி மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு ரெயில்கள் மற்றும் பஸ்கள் மூலம் வந்து பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.

நேற்றுமுன்தினத்துடன் பொங்கல் தொடர் விடுமுறை முடிவடைந்ததை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இருந்து மீண்டும் மக்கள் அந்தந்த ஊருக்கு புறப்பட்டனர். பொதுமக்களின் வசதியாக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் மொத்தம் 118 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

ரூ.82 லட்சம் வசூல்

குமரி மாவட்டத்தில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து சிறப்பு பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் பஸ்களில் கிடைக்கும் தினசரி வருவாயை விட நேற்றுமுன்தினம் ரூ.21 லட்சம் கூடுதலாக வசூலானது. அதன்படி நேற்றுமுன்தினம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் ரூ.82 லட்சம் வசூலாகி உள்ளது என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்