உண்டியல் மூலம் ரூ.6½ லட்சம் வசூல்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.6½ லட்சம் வசூலானது.

Update: 2023-09-26 18:45 GMT

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.6½ லட்சம் வசூலானது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் 17 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்கள் அனைத்தும் 3 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை 27 நாட்களில் அனைத்து உண்டியல்களும் நேற்று திறந்து எண்ணப்பட்டன. அதன்படி குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ரத்னவேல் பாண்டியன் தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உதவி ஆணையர் தங்கம் முன்னிலையில், ஆய்வாளர் சரஸ்வதி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளரும், கோவில் மேலாளருமான ஆனந்த், மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆதி பராசக்தி மன்றத்தினர் மற்றும் பக்தர்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.6 லட்சத்து 65 ஆயிரத்து 939 வசூலாகி இருந்தது. தங்கம் 1 கிராம், வெள்ளி 45 கிராம் மற்றும் வெளிநாட்டு பணம் வசூலாகி இருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்