தாணுமாலய சாமி கோவிலில் உண்டியல் மூலம் ரூ.16 லட்சம் வசூல்
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் உண்டியல் மூலம் ரூ.16 லட்சம் வசூலானது.
சுசீந்திரம்:
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் உண்டியல் மூலம் ரூ.16 லட்சம் வசூலானது.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு வருகின்ற பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் கோவில் நிர்வாகம் கோவிலை சுற்றிலும் 11 உண்டியல்கள் வைத்துள்ளனர். இந்த உண்டியல்கள் அனைத்தும் 3 மாதங்களுக்கு ஒருமுறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அந்தவகையில், நேற்று குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், உதவி ஆணையர் தங்கம் முன்னிலையில், ஆய்வர் ராமலட்சுமி, கண்காணிப்பாளர் ஆனந்த், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோவில் பணியாளர்களும், சுய உதவி குழு பெண்களும் உண்டியலை திறந்து பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் வருமானமாக ரூ.16 லட்சத்து 26 ஆயிரத்து 916-ம், 9.630 கிராம் தங்கமும், 10.660 கிராம் வெள்ளியும் மற்றும் வெளிநாட்டு பணங்களும் வருமானமாக கிடைத்துள்ளது. இவ்வாறு திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.