பூ மார்க்கெட் கடைக்கு வாடகையாக வசூலிக்க வேண்டும்
பூ மார்க்கெட் கடைக்கு வாடகையாக வசூலிக்க வேண்டும்
திருப்பூர்
நல்லூர் நுகர்வோர் நல மன்றத்தின் தலைவர் சண்முகசுந்தரம், மாநகராட்சி ஆணையாளரிடம் அளித்த மனுவில், திருப்பூர் பூ மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 84 கடைகள் ஏலம் (புதன்கிழமை) ஏலம் விடப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த கடைகள் சிறிய அளவில் உள்ளது. பூ மார்க்கெட் வருபவர்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு நெருக்கடியாக உள்ளது. மாநகராட்சி சட்டத்தின்படி ஒவ்வொரு கடைகளுக்கும் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். இருசக்கர வாகனங்களுக்கு 12 மணி நேரத்துக்கு பார்க்கிங் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். மாநகராட்சி நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். பெருமாள் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என்று கூறியுள்ளார்.
---------