இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

சுரக்குடிபட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-05-15 21:09 GMT

திருக்காட்டுப்பள்ளி:

சுரக்குடிபட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

பூதலூர் அருகே உள்ள சுரக்குடிபட்டி கிராமத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் இருந்து இந்த கிராமத்தின் அனைத்து குடும்பங்களுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. குடிநீர் தொட்டியின் தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.

இடிந்து விழும் நிலையில் உள்ளது

மேலும் தண்ணீர் தேங்கி நிற்கும் தொட்டியின் அடிப்பகுதியில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் குடிநீர் தொட்டி இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் செல்லவே பொதுமக்கள் அச்சப்பட்டு வருகின்றனர்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கும். மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் இந்த குடிநீர் தொட்டி மேலும் சேதமடைந்து இடிந்து விழும் அபாயம் உள்ளது.

புதிதாக கட்டித்தர வேண்டும்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் அல்லது அதை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர

Tags:    

மேலும் செய்திகள்