கள்ளழகர் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக தென்னை நார்விரிப்புகள்
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கள்ளழகர் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக தென்னை நார்விரிப்புகள் விரிக்கப்பட்டு உள்ளன.
அழகர்கோவில்,
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், ஏராளமான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சித்திரை மாத கோடை வெயில் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. இதையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில் துணை ஆணையர் ராமசாமி மேற்பார்வையில் தென்னை நார் விரிப்புகள் கோவில் வெளி மைய வளாக பாதையில் விரிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் விரிக்கப்பட்டு உள்ள நார்விரிப்பான் மீது நடந்து சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தென்னை நார் விரிப்புகள் விரிக்கப்பட்டு இருப்பதற்கு பக்தர்கள் வரவேற்று உள்ளனர்.