தென்னை நார் உலர வைக்கும் பணி தீவிரம்

நெகமம் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலால் தென்னை நார் உலர வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2023-05-24 19:15 GMT

நெகமம்

நெகமம் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலால் தென்னை நார் உலர வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

தென்னை நார்

நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்கு 350-க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் தினமும் தென்னை நார் உலர வைக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.

ஆனால் மழை காலங்களில் தென்னை நார் உலர வைக்கும் பணி மந்தமாக இருக்கும். அதை ஈடுகட்ட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது தென்னை நார் உலர வைக்கும் பணி தீவிரமாக நடைபெறும். மேலும் உற்பத்தியும் அதிகளவில் இருக்கும்.

உலர வைக்கும் பணி

இங்குள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தென்னை நார் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்த மாதங்களில் தென்னை நார் உற்பத்தி மந்தமானது. பருவமழைக்கு பிறகு கடந்த சில மாதங்களாக மழை இல்லாமல் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் தாக்கத்தால் தென்னை நார் உலர வைக்கும் பணியில் தற்போது உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உற்பத்தி அதிகரிக்கும்

இதுகுறித்து தென்னை நார் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:- ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மழை குறைவாக இருக்கும்போது தென்னை நார் உலர வைக்கும் பணியில் தீவிரம் காட்டுவோம்.

அதன்படி தற்போது வடமாநில தொழிலாளர்களை கொண்டு வெயிலின் தாக்கம் இருக்கும் இந்த நேரத்தில் தென்னை நார் உலர வைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் தென்னை நார் உற்பத்தி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இ்வ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்