கோவை சிறை முற்றுகை போராட்டம்

20 ஆண்டுக்கு மேல் வாடும் கைதிகளை விடுவிக்கக்கோரி கோவை சிறை முற்றுகை போராட்டம் போராட்டம் நடக்கிறது

Update: 2023-06-20 22:15 GMT


கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் உள்ளிட்ட கோவை மண்டல த.மு.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது. இதில் ம.ம.க. மாநில பொருளாளர் உமர் தலைமை தாங்கி பேசினார்.

கூட்டத்தில், சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி கோவை மத்திய சிறை முன்பு அடுத்த மாதம (ஜூலை) 9-ந் தேதி மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில செயலாளர்கள் கோவை அமீது, பழனி பாரூக், மாநில தலைமை பிரதிநிதிகள் சாதிக் அலி, கோவை அக்பர், மாவட்ட தலைவர் சர்புதீன், ஹாருன் ரஷீத், ரிஸ்வான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்