சேலம் வழியாக செல்லும் கோவை-ஹிசார் ரெயில் இன்று மாற்றுப்பாதையில் இயக்கம்

சேலம் வழியாக செல்லும் கோவை-ஹிசார் ரெயில் இன்று மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

Update: 2023-02-17 22:23 GMT

சூரமங்கலம்:

கோவையில் இருந்து அரியானா மாநிலம் ஹிசார் இடையே வாராந்திர ரெயில் (வண்டி எண் 22476) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், யளஹங்கா, தர்மாவரம், ரெய்ச்சூர், சோலாப்பூர் வழியே இயக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சிகிசெர்லா - தர்மாவரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுவதால், இன்று இயக்கப்படும் கோவை-ஹிசார் வாராந்திர ரெயில் சேலம், ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா, குண்டுக்கல் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்