கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: மேலும் 2 பேர் கைது
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.;
கோவை,
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கோவை கார் வெடிப்பு வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு(என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.
அதன்பின், இந்த வழக்கில் உமர் பரூக், பெரோஸ் கான், முகமது தவ்பிக் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த ஷேக் இதயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகியோர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் குண்டு வெடிப்பு தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் 2 பேரும் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.