கோவை: தங்க நகைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.
கோவை,
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே அறுவடை நகர் பகுதியில் தங்க நகைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் உள்ள சேமிப்புக் கிடங்கில் இன்று மதியம் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறினர். இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.