கோவை: வால்பாறை அருகே ஆற்றில் மூழ்கி 5 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!
வால்பாறை அருகே சோலையாறு ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி 5 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.;
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையாறு சுங்கம் ஆற்றில் கல்லூரி மாணவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி 5 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் மூழ்கிய மாணவர்களை தேடிவந்த நிலையில், மாணவர்கள் 5 பேரையும் தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டுள்ளனர். உயிரிழந்த 5 பேரும் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் இருந்து சுற்றுலா வந்த மாணவர்கள் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஆற்றில் குளிக்க சென்ற மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.