உடன்குடியில் தேங்காய் கிலோ ரூ.18-க்கு விற்பனை

உடன்குடியில் தேங்காய் கிலோ ரூ.18-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2023-07-12 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி வட்டாரத்தில் தென்னை, பனை, வாழை, முருங்கை விவசாயம் நடக்கிறது. இப்பகுதியில் அதிக அளவில் தேங்காய் விளைச்சல் ஆகிறது.

கடந்த மாதம் இப்பகுதியில் தேங்காய் ஒரு கிலோவுக்கு ரூ. 35-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து தேங்காய் விலை சரிந்து வந்தது. நேற்று ஒரு கிலோ ரூ.18-க்கும், தேங்காய் சிரட்டை ஒரு கிலோ ரூ.8-க்கும் விற்பனை ெசய்யப்பட்டது. காய்கறிகள் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படும் நிலையில், தேங்காய் விலை சரிந்துள்ளது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய போதிலும், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்