600 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள்

சந்திரபாடி ஊராட்சியில் 600 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது

Update: 2023-01-19 18:45 GMT

பொறையாறு:

சந்திரபாடி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், நீர்வளத்துறை மற்றும் அனைத்து துறைகளின் சார்பில் 100 சதவீத மானியத்தில் 600 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தென்னங்கன்றுகள் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு சந்திரபாடி ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ராஜ்குமார் தலைமை தாங்கினார். செம்பனார்கோவில் வேளாண்மைத்துறை பொறுப்பு அலுவலர் உதயசூரியன், பொறையாறு நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சீனிவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செம்பனார்கோவில் ஒன்றிய கவுன்சிலர் செல்வம் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் ரமேஷ், 600 குடும்பங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்கினார். இதில் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்