300 பேருக்கு தென்னங்கன்றுகள்

300 பேருக்கு தென்னங்கன்றுகள்;

Update:2023-03-02 00:15 IST

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி கீழையூர் ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன் திருப்பூண்டி, காரைநகர், வள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொடியேற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் 300 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினர். இதில் மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முகமது ரபீக், ஒப்பந்தக்காரர் செல்வம், கட்சி பொறுப்பாளர்கள் சத்தியராஜ், ரஹ்மத்துல்லா, அஞ்சான், சுப்பிரமணியன், வீரத்திருமகன், வினோத் மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்