ரூ.11 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்திவேலூரில் ரூ.11 லட்சத்து 17 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.

Update: 2023-08-31 18:45 GMT

பரமத்திவேலூர்

தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற மின்னணு ஏலத்திற்கு 21 ஆயிரத்து 735 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.76.19-க்கும், குறைந்தபட்சமாக 55.10-க்கும், சராசரியாக ரூ.73.91-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.15 லட்சத்து 21 ஆயிரத்து 450-க்கு ஏலம் நடைபெற்றது.

ரூ.11¼ லட்சத்துக்கு விற்பனை

இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 15 ஆயிரத்து 960 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.77.01-க்கும் குறைந்தபட்சமாக ரூ.51.99-க்கும், சராசரியாக ரூ.76.89-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.11 லட்சத்து 17 ஆயிரத்து 263-க்கு ஏலம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்