தென்னங்கன்றுகள் நடும் விழா

வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் தென்னங்கன்றுகள் நடும் விழா நடந்தது.

Update: 2022-05-29 16:14 GMT

சீர்காழி:

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் தமிழக அரசின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு தென்னங்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அசோகன், துணைத் தலைவர் அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரித்தண்டலர் அமுதா வரவேற்றார். விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தென்னங்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து பேசினார். இந்த விழாவில் தி.மு.க.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர், மாவட்ட பிரதிநிதி கமலநாதன், துப்புரவு மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்