2¾ டன் தேங்காய் பருப்பு விற்பனை

கொங்கணாபுரத்தில் 2¾ டன் தேங்காய் பருப்பு விற்பனையானது.;

Update: 2023-05-24 19:39 GMT

எடப்பாடி

கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நிலக்கடலை, எள், தேங்காய் பருப்பு உள்ளிட்ட பல்வேறு விளைப்பொருட்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற தேங்காய் பருப்புக்கான பொது ஏத்தில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த 59 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனையானது. இதில் விலை ஆதார திட்டத்தின் கீழ் 11 மூட்டை தேங்காய் பருப்புகள் கிலோ ஒன்று ரூ.108.60 விலையில் கொள்முதல் செய்யப்பட்டது. மீதமுள்ள தேங்காய் பருப்புகளில் முதல் ரக தேங்காய் பருப்பு கிலோ ஒன்று ரூ.84.16 முதல் ரூ.79.20 வரையில் விற்பனையானது. இதே போல் இரண்டாம் ரக தேங்காய் பருப்பு கிலோ ஒன்று ரூ.74.20 முதல் ரூ.50.50 வரை விற்பனையானது. நாள் முழுவதும் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 2 டன் 853 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்புகள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த தேங்காய் பருப்புகள் மொத்தம் சுமார் ரூ.1¾ லட்சத்துக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்