தேங்காய் பருப்பு ஏலம்
திருச்செங்கோட்டில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
எலச்சிபாளையம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. முதல் தர தேங்காய் பருப்பு கிலோ ரூ.81 முதல் ரூ.90 வரையிலும், இரண்டாம் தரம் கிலோ ரூ.61 முதல் ரூ.79 வரையிலும் விற்பனை ஆனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர். இதில் சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் தேங்காய் பருப்பை ஏலத்தில் எடுத்து சென்றனர். மொத்தம் 100 மூட்டை தேங்காய் பருப்புகள் ரூ.3. லட்சத்துக்கு ஏலம் போனதாக என அதிகாரிகள் தெரிவித்தனர்.