ஓமலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ.8 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

ஓமலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.8 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.

Update: 2023-09-30 20:35 GMT

ஓமலூர்

ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி மேச்சேரி பிரிவு ரோடு பகுதியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று கொப்பரை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு நேற்று 229 மூட்டை தேங்காய் கொப்பரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஏலத்தில் அதிகபட்ச விலையாக 78.89 ரூபாயும், குறைந்தபட்ச விலையாக ரூ.56.75-க்கும் தேங்காய் பருப்பு ஏலம் போனது.

இதில் சராசரி விலையாக ரூ.75.25-க்கு விற்பனை ஆனது. நேற்று மட்டும் ரூ.8 லட்சத்து 8 ஆயிரத்து 935-க்கு தேங்காய் பருப்பு ஏலம் போனதாக வேளாண் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்