வாடிப்பட்டி அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
வாடிப்பட்டி அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்ட விற்பனைக் குழு சார்பாக வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் 2 விவசாயிகளின் 1,260 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. இந்த 9 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இந்த ஏலத்தில் அதிகபட்சமாக விலையாக ரூ.9.85-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6.25-க்கும் சராசரியாக ரூ.7.91-க்கும் ஏலம் போனது. இதனால் ரூ.9968 தேங்காய் வர்த்தகம் நடந்தது.மேலும் 7 விவசாயிகளின் 805.8 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதில் 5 வியாபாரிகள் பங்கேற்று அதிகபட்சமாக ரூ.80, குறைந்த பட்சமாக ரூ.57.10-க்கு சராசரியாக ரூ.70.58 ஏலம் போனது. இதனால் ரூ.56, 878 கொப்பரை தேங்காய் வர்த்தகம் நடந்தது. மேலும் தகவல் அறிய வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மேற்பார்வையாளர் அபிநயாவை தொடர்பு கொள்ளலாம்.