பரமத்திவேலூரில் ரூ.96 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

Update: 2023-01-31 18:45 GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் மின்னனு தேசிய வேளாண்மை சந்தையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடந்து வருகிறது. கடந்த வாரம் நடந்த ஏலத்துக்கு 1,894 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.28.10-க்கும், குறைந்த பட்சமாக ரூ.21.19-க்கும், சராசரியாக ரூ.24-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.44 ஆயிரத்து 183-க்கு தேங்காய் விற்பனையானது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 260 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.27.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.18-க்கும், சராசரியாக ரூ.25-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.96 ஆயிரத்துக்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது.

மேலும் செய்திகள்