ரூ.49 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

Update: 2023-09-26 17:34 GMT


வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. அதில் திருச்சி, பழனி, லாலாபேட்டை, பச்சூர், வாணியம்பாடி மற்றும் வேலம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 105 விவசாயிகள் 1,339 மூட்டை தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியான வெள்ளகோவில், காங்கயம், முத்தூர், நஞ்சை ஊத்துக்குளி மற்றும் ஊத்துக்குளி ஆர்.எஸ்.பகுதியை சேர்ந்த 12 வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். குறைந்தபட்சமாக மூட்டை ஒன்றுக்கு 5768 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 7,876 ரூபாய்க்கும் ஏலம் எடுத்தனர். சராசரி விலையாக ரூ.7,488 என்ற கணக்கில் 1339 மூட்டைகள் சுமார் ரூ.48 லட்சத்து 96 ஆயிரத்து 446-க்கு ஏலம் நடைபெற்றது. இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்